சனிக்கிழமை இரவு நான் கடவுள் படம் போவதாக நண்பர்கள் குழாம் முடிவெடுத்தது. சரியென மனைவி மக்களை எல்லாம் வீட்டில் விட்டு விட்டு (நல்ல வேளை) நண்பர்களுடன் படத்துக்கு போயாகி விட்டது. அவ்வளவாக கூட்டமும் இல்லை திரையரங்கில்.
இதோ கதைச் சுருக்கம்.
தன் குழந்தையின் ஜாதகப்படி 14 வருடங்கள் குழந்தையின் முகம் பாராமல் இருப்பது குடும்பத்துக்கு நல்லது என்பதால் 14 வருடங்களாக காசியில் அனாதையாக விடப்படும் ஆர்யா அங்கே ருத்ரன் என்னும் அகோரி சாமியாராக உருவெடுக்கிறார். அகோரிகளின் தாத்பர்யம் நானே பிரம்மா, நானே விஷ்ணு, நானே கடவுள். இவர்கள் எரியும் சிதைக்கருகே நின்று ஆசீர்வதித்தால் மறுபிறவி கிடையாது எனும் இந்துத்துவ நம்பிக்கை. அதே போல அகோரிகளுக்கு தீயவற்றை கண்டறியும் சக்தியும் உண்டு.
பதினாலு வருடங்கள் கழித்து மனச் சாட்சி உறுத்துவதாலோ இல்லை மனைவியின் அரற்றல் தாங்காமலோ மகனை தேடி காசி வரும் தகப்பன், ஆயிரமாயிரம் சந்நியாசிகளுக்கு நடுவே ஒரு முறை பார்த்தத்தும் மகனை அடையாளம் காண்கிறார் தந்தை. தலை நிறைய, முகம் நிறைய முடியுடன் ஆர்யாவை பார்வையாளர்களான நமக்கே அடையாளம் தெரிவது கஷ்டமாக இருக்கும் போது இடுகாட்டு சாம்பலை முகம் உடல் முழுக்க பூசிய நிலையில் மகனை தந்தை அடையாளம் காணுகிறாராம்.
அதை அடுத்து மகனை தென் தமிழகத்தில் இருக்கும் மலைக்கோவிலுக்கு அழைத்து வருகிறார் தந்தை. மலைக்கோவிலில் உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்கும் தாயிடம் கஞ்சா இருக்கா எனக் கேட்டு அதிர வைக்கிறது நம்ம அகோரி சாமி. வீட்டுக்கு வந்தாலும் மனம் ஒன்றாது கோவிலில் போய் கஞ்சா அடித்துக் கொண்டு ஏதேதோ சம்ஸ்கிருத மந்திரங்கள் சொல்லி பூஜைகள் செய்து கொண்டு செட்டில் ஆகிறது அகோரி ஆர்யா சாமி.
அதே மலைக்கோவிலில் இருக்கும் ஒரு பாழடைந்த தரைக்கடியில் இருக்கும் ஒரு கோவில் மண்டபத்துக்குள் விரிகிறது படம். மண்டபம் முழுக்க கால் ஊனம், கை ஊனம், மன வளர்ச்சி இல்லாத, வயதான, அகோரமான என கடவுளால் பழிக்கப்பட்டு பிறந்த பல மக்களை வைத்து பிச்சை எடுக்கும் தொழில் செய்யும் ஈவு இரக்கமே இல்லாத ஒரு முதலாளி தாண்டவன். அவனுக்கு உதவியாக முருகன் என்னும் ஒருவன். ஊனமுற்றவர்களை மனிதர்களாக கூட கருதாமல் உருப்படிகளாக கருதி, அவர்கள் பிச்சைக் காசை எடை போட்டு எடுத்து லாபம் காணும் அந்த சில கணங்கள் கொடூரம். கர்ண கொடூரம். அந்த மண்டபக் காட்சிகளில் சேதுவில் மனநிலை பிறழ்ந்த விக்ரமை கட்டிப் போட்டு வைத்திருக்கும் காட்சிகளை நினைவு படுத்துகின்றன.
இப்போ பூஜா - கதாநாயகி. கண் தெரியாத பிச்சைக்காரி. இவர்களுக்கென ஒரு தனி உலகம். எம் ஜி ஆர் ஆக, சிவாஜியாக ரஜினியாக வேடமிட்டு பிச்சை எடுக்கும் கூட்டத்தில் பாட்டுப் பாடும் குருட்டுப் பெண் பூஜா. பூஜா ஓடும் ரயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுக்கும் போது முருகனின் கண்ணில் பட, பராக்கிரமம் மிக்க ஒரு காவல் துறை அதிகாரி உதவியோடு பூஜா தாண்டவனின் கும்பலுக்கு கடத்தப்படுகிறார். இந்த கும்பலில் பெண் வேடமிட்டு ஆடும் ஒரு ஆணின் கதாபாத்திரத்தின் பெயர் நயன்தாரா. இதை விட நயன் தாராவை யாரும் கேவலப்படுத்த முடியும் என எனக்குத் தோன்றவில்லை. இவர்கள் காவல் நிலையத்தில் அடிக்கும் கூத்து நகைச்சுவை என்று எடுக்கப்பட்டிருந்தாலும், மனித மனங்களின் உள்ளே உள்ள வக்கிரத்தின் வடிகால் என்றே எனக்குப் பட்டது.
தாண்டவனின் உருப்படிக் கும்பலில், தோளில் கிளி தாங்கும் ஆண்டாளாய், பொன்னார் மேனியனாய் புலித்தோலை அரைக்கசைத்து, பெருமாளாய் என எல்லா இந்து கடவுள்கள் வேஷத்திலும் குள்ள மனிதர்கள், உடல் ஊனமுற்றோர் என பலரும் பிச்சை எடுக்க, அதில் இரு சிறார்களின் பேச்சும், சிரிப்பும் பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது. அந்த நிலையில் அவர்கள் அப்படி சிரிக்க முடியுமானால் நமக்கெல்லாம் என்ன கேடு என தோன்றுகிறது.
இப்ப, தாண்டவனை வியாபார விசயமாக சந்திக்கும் ஒரு நாயர். இவர் கேரளாவில் தாண்டவனின் தொழில் செய்பவர். இவர் வந்து பணம் கொடுத்து தாண்டவனின் உருப்படிகளை பண்டமாற்று செய்ய வருகிறார். இளம் சிறார்களாய் பார்த்து தேர்ந்தெடுத்து இவர் அள்ளிக் கொண்டு போக தன் பேரனை இழக்கும் ஒரு பிச்சைக்கார கிழவரின் கோபத்தையும் ஆற்றாமையையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், கடவுளை தே... மகன் என வர்ணிக்கும் வசனம் தேவை இல்லாதது என நான் கருதுகிறேன்.
அடுத்து கேரளாக்காரருடன் வரும் அரூபி தன்னுடன் வாழ ஒரு பெண்ணை விலைக்கு வாங்க வருகிறார். அரூபி என்பதால் கண்ணில்லாத பூஜா தான் சரியான ஆள் என தேர்வு செய்யப்பட, முருகன் மனம் பதைத்து பூஜாவை தப்பிக்க செய்கிறார். தப்பிக்க முயலும் பூஜா, அகோரி சாமியிடம் சரணடைய, நாயரை நேருக்கு நேர் பார்க்கும் அகோரி அவரை அடித்து துவைத்து.... அடுத்து நாயர் காணாமலே போகிறார். அகோரியை காவல் துறை கைது செய்தாலும் எந்த ஆதாரமும் இல்லாததால் அவர் விடுவிக்கப்படுகிறார். பூஜா திரும்ப தாண்டவனிடம் பிடித்து வரப்பட, பூஜாவை கையில் கிடைக்கும் கல் ஒன்றை எடுத்து அடித்து சிதைக்கிறான் தாண்டவன். அடுத்து தாண்டவன் வந்து அகோரி சாமியை பார்த்து துவம்சம் ஆகிறார். பூஜா வந்து கடைசியில் அகோரி சாமியிடம் சரணடைய
"வாழ தகுதி இல்லாதவர்களுக்கு நான் தரும் மரணம் தண்டனை.
வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்" என படம் முடிகிறது.
முதல் 20 நிமிடங்களுக்கு வரும் காசி நகரக் காட்சிகளும் ஆர்யாவும் சரியான மிரட்டல். கங்கை கரையில் எரியும் பிணங்களும், கோவண சாமியார்களுமாய் அரட்டும் காட்சிகள். இது வரை ரொமாண்டிக் ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட ஆர்யாவுக்கு இந்த படத்தில் மிரட்டும் அகோரி வேசம். பூஜாவுக்கும் குருட்டு பிச்சைக்காரி வேஷம்.
மனதை பிழிய வைக்கும் பிச்சைக்காரர்களின் குரூர உலகம் பார்ப்பவர்கள் மனதை பிசைய இப்படி ஒரு படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வருவது என்ன என்று எனக்கு புரியவில்லை. இடுகாட்டின் மேலும், எரியும் பிணங்கள் மேலும், பிணச் சாம்பலிலும், மனம் பிறழ்தலிலும் இயக்குனருக்கு அப்படி என்ன மையலோ தெரியவில்லை.
அதற்கும் மேலே இந்தப் படத்தை பற்றி வரும் ஆஹா ஓஹோ விமர்சனங்கள் என்னை இன்னும் குழப்புகின்றன. ஒரு வேளை எனக்குத் தான் கலைக் கண் இல்லையோ. ஒரு சைக்கோ தனமான இயக்குநரின் சைக்கோ தனமான குரூரமான படம் இது என்பது என் தாழ்மையான கருத்து. படம் முழுக்க அழுக்கும், கொடூரமும், குரூரமும்.... ஐயோ ஆளை விடுங்க சாமி. இப்படி ஒரு படத்தை ரசிப்பதென்றால் நான் கலைக் கண் இல்லாத குருடனாகவே இருந்து விட்டுப் போகிறேன்.
Monday, February 9, 2009
Thursday, December 11, 2008
ரப்பரும் எரேசரும்
அமரிக்கா வந்த புதுசுல நம்ம ஆங்கிலப் புலமைய பத்தி தான் ஏற்கனவே சொல்லி இருக்கம்ல? அதோட ஒரு தொடர்ச்சி தான் இது.
முத வேலை எனக்கு ஒரு பேங்குல. நேரடியா ஒரு டைரக்டர்கிட்ட ரிப்போர்ட்டிங். முத வாரம் ஆபீசுல ஏதும் பேனா பென்சில் வேணும்னா, டைரக்டரோட அசிஸ்டண்ட்கிட்ட போய் கேட்டா தருவாங்கன்னு சொன்னாங்க. அந்த அசிஸ்டண்ட்டு முப்பத்து சொச்ச வயசுல அழகான ஒரு பொண்ணு.
இரண்டாவது வாரம் எனக்கு ஒரு பென்சில் அழிப்பான் (அதாங்க அழி ரப்பர்) தேவைப்பட்டது. நேரா அம்மணி கிட்ட போயி எனக்கு ஒரு ரப்பர் வேணும்னேன். கணினில ஏதோ டைப் பண்ணிகிட்டு இருந்த அம்மணி முகத்துல அதிர்ச்சி. பட்டுன்னு நிமிந்து என்ன வேணும்னு திரும்ப கேட்டாங்க. நானும் ரொம்பத் தெளிவா நிதானமா ரப்பர் வேணும்னேன். அடுத்து நடந்தது எனக்கு அதிர்ச்சி. அம்மணி ஒண்ணும் பேசாம வேகமா எந்திருச்சி டைரக்டர் ரூமுக்குள்ள போய் கதவ மூடிக்கிட்டாங்க. போன வேகத்த பார்த்தா ஏதோ கோபமா போற மாதிரி இருந்துச்சி. எனக்கொண்ணும் புரியல. என்னடா இது ஒரு அழி ரப்பர் கேட்டதுக்கு எதுக்கு கோபப்படணும்னு வந்து என் டெஸ்க்குல உட்கார்ந்துட்டேன்.
கொஞ்ச நேரத்துல போனுல டைரக்டர் என்னை அவர் ரூமுக்கு வரச் சொன்னார். போனா அம்மணி, டைரக்டர், ஹியூமன் ரிசோர்ஸ்ல இருந்து ஒரு பாட்டி எல்லாம் இருக்காங்க. அம்மணி மூஞ்சி அழுதாப்பல இருக்கு. என்ன கேட்டேன்னு எல்லாரும் என்னை திரும்ப திரும்ப கேட்டாங்க. நான் பென்சில வச்சி எழுதி காட்டி இதை அழிக்க ரப்பர் கேட்டேன்ன்னு சொன்னதும், எல்லாரும் ஓகோகோன்னு ஒரே சிரிப்பு. நாஞ் சொன்னேன் எங்கூருல எல்லாம் இத ரப்பர்ன்னு தான் சொல்லுவோம்ன்னேன். இப்ப திரும்ப எல்லாரும் சிரிச்சாங்க. அடுத்து அம்மணி எம்பக்கத்துல வந்து என்னை கட்டி பிடிச்சி ஸாரி டியர்ன்னு சொல்லி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சி.
என்னடா இது அம்மணப் பய ஊருல கோமணங் கட்டுனவன் பைத்தியாரங்கற மாதிரி எல்லோரும் சிரிக்கும் போது நாமளும் சிரிக்கணுமேன்னு சிரிச்சும் வச்சேன். அப்பறமா டைரக்டர் என்கிட்ட சொன்னது. நீ கேட்டதுக்கு இங்க பேரு எரேசர். ரப்பர்ன்னா ஆணுறைன்னு சொல்லி திரும்ப குமரி முத்து மாதிரி சிரிக்கிறார். எல்லாங் கெரகந்தேன்

Monday, December 1, 2008
எல்லைகள்
எல்லைகளிருக்கின்றன.
தனித்தனியே நமக்குள்.
உன்னளவில் நீயும்
என்னவளவில் நானும்
மவுனமாய் இயங்குகிறோம்.
சரி....
நம்முடையதைப் பற்றி
நம்மிருவரில் யாராவது
பேசித்தானே ஆகவேண்டும்.
எப்போதாவது
எல்லை தாண்டி........
- எங்கேயோ எப்போதோ படித்தது
தனித்தனியே நமக்குள்.
உன்னளவில் நீயும்
என்னவளவில் நானும்
மவுனமாய் இயங்குகிறோம்.
சரி....
நம்முடையதைப் பற்றி
நம்மிருவரில் யாராவது
பேசித்தானே ஆகவேண்டும்.
எப்போதாவது
எல்லை தாண்டி........
- எங்கேயோ எப்போதோ படித்தது
Wednesday, November 26, 2008
New Wall Street Definitions
இத்த தமிழ்ல பதிஞ்சா அவ்ளோ நல்லா இருக்காது. அதான் ஆங்கிலத்திலேயே
New Wall Street Definitions
CEO - Chief Embezzlement Officer.
CFO - Corporate Fraud Officer.
BULL MARKET - A random market movement causing an investor to mistake himself for a financial genius.
BEAR MARKET - A 6 to 18 month period when the kids get no allowance, the wife gets no jewelry, and the husband gets no sex.
P/E RATIO - The percentage of investors wetting their pants as the market keeps crashing.
BROKER - What my broker has made me.
STANDARD & POOR - Your life in a nutshell.
STOCK ANALYST - Idiot who just downgraded your stock.
STOCK SPLIT - When your ex-wife and her lawyer split your assets equally between themselves.
MARKET CORRECTION - The day after you buy stocks.
CASH FLOW - The movement your money makes as it disappears down the toilet.
INSTITUTIONAL INVESTOR - Past year investor who's now locked up in a nuthouse.
MOMENTUM INVESTING - The fine art of buying high and selling low.
VALUE INVESTING - The art of buying low and selling lower.
"BUY, BUY" - A flight attendant making market recommendations as you step off the plane.
FINANCIAL PLANNER - A guy who actually remembers his wallet when he runs to the 7-11 for toilet paper and cigarettes. CALL OPTION - Something people used to do with a telephone in ancient times before e-mail.
YAHOO - What you yell after selling all you owned to some poor sucker for $240 per share.
WINDOWS - What you jump out of when you're the sucker that bought Yahoo for $240 per share.
PROFIT - Religious guy who talks to God.
BILL GATES - Where God goes for a loan.
ALAN GREENSPAN - God (past tense).

Monday, November 24, 2008
கண்ணாமூச்சி ஏனடா?
கொஞ்சம் Father of the Bride, கொஞ்சம் Meet the Parents, கொஞ்சம் நவீன தமிழக காதல், கொஞ்சம் சிங்கப்பூர் லொகேசன், நிறைய காமடி கலந்து அடித்த ஒரு படம் தான் கண்ணாமூச்சி ஏனடா?
கதாநாயகன் பிரித்விராஜ் சிங்கப்பூரில் தான் சந்திக்கும் சந்தியாவுடன் காதலில் விழுகிறார். வழக்கம் போல காதலுக்கு பிருத்விராஜ் வீட்டில் எதிர்ப்பு. சரியென காதலுக்காக எல்லாம் துறந்து சந்தியாவுடன் இந்தியா வந்தால் இங்கே மாமனார் சத்யராஜுடன் மோதல். கலகலப்பாய் படம் போகிறது. தேவையே இல்லாமல் ராதிகா சத்யராஜ் மோதல் மற்றும் ஸ்ரீப்ரியாவை இடைவளிக்கப்பறாம் புகுத்தாமல் இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
சும்மா ஆய் ஊய் பஞ்ச் டயலாக் படங்கள் பார்த்து சலித்துப் போனதால் இம்மாதிரி அதிக இரைச்சல் இல்லாத படங்களை ரசிக்க முடிக்கிறது என நினைக்கிறேன். நக்கலும் நையாண்டியுமாய் வசனங்கள் நல்லா இருந்தன.
மக்கா நீங்க என்ன நினைக்கிறீங்க?

Monday, November 17, 2008
டானல்ட் இ வெஸ்ட்லேக். Donald E.Westlake
டானல்ட் இ வெஸ்ட்லேக். Donald E.Westlake
சும்மா ஹெடெக்கா எழுதுறதோ, மனோதத்துவம் எழுதுறேன்னு சொல்லி கொழப்புறதோ, உளவுத் துறை பற்றி எழுதுறேன்னு சொல்லி சும்மா அந்த துப்பாக்கி இந்த பீரங்கின்னு 40 பக்கத்துக்கு ஆயுதங்கள் பத்தி டெக்னிகல் தகவல்கள் கொடுக்கிறதோ, பயமுறுத்துறேன் பேர்வழின்னு கண்டதை பத்தி எழுதுறதோ கிடையாது இவர். நல்ல நகைச்சுவை உணர்வு, இயல்பான எளிதான கதை ஓட்டம், சிக்கலில்லாத கதைக்கரு, முக்கியமாக எளிதில் புரியும் அதிகம் கஷ்டப்படாத வார்த்தைப் பிரயோகங்கள் என நல்லா இருக்கும். (அட எனக்கே இவர் கதை படிச்சதும் புரிஞ்சிடுச்சின்னா பாருங்களேன். அதும் ஒரு தடவ கூட டிக்ஸ்னரி தேடாம...)
முதலில் என்னை ஈர்த்தது இவர் எழுதிய டிரவுண்ட் ஹோப்ஸ் (Drowned Hopes) புத்தகம் தான். செம ரகளையா இருக்கும்.
இவரின் கதாபாத்திரங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும். முக்கியமா இவரது ஒரு ஹீரோ பேரு - ஜான் டார்ட்மண்டர். (John Dartmunder)
ஹீரோ ஒரு திருடன். இவன் அதிர்ஷ்டம் எப்படின்னா "விடியா மூஞ்சி வேலைக்கு போனா வேலை கெடச்சாலும் கெடக்கும். கூலி கெடக்காது"ன்னு நம்மூரு பக்கம் ஒரு சொலவட சொல்லுவாங்களே அது மாதிரி. தொட்டது எதும் துலங்காது. இந்த ஹீரோவும் அவரோட கூட்டாளிங்களும் செய்கிற பல திருட்டு வேலைகள் தான் கதைகள்.
இவரே இன்னும் பல புனைப்பேர்கள்ல எழுதி இருக்கார். ரிச்சர்ட் ஸ்டார்க் (Richard Stark), டக்கர் கோ (Tucker Coe), சாமுவேல் ஹால்ட் (Samuel Holt), எட்வின் வெஸ்ட்(Edwin West).
இவரது நாவல்கள் ஹாலிவுட்டில் திரைப்படங்களாக வந்துள்ளன. புகழ் பெற்ற படங்கள் சில.
வாட் ஈஸ் தி வொர்ஸ்ட் தெட் குட் ஹேப்பன் (What is the worst that could happen)
பே பேக் (Pay Back).
தயவு செஞ்சி படிச்சி பாருங்க... மேலும் தகவல்களுக்கு http://www.donaldwestlake.com/

Sunday, November 16, 2008
அலிபாபான்னு ஒரு படம்
முதல்லயே சொல்லிர்றேன் என்னை அடிக்க வராதீங்க. போன வாரம் அலிபாபான்னு ஒரு படம் பார்த்தேன். எனக்கு பிடிச்சி இருந்தது. அந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்துக்கள் இங்கே.
சின்ன சின்னதா திருடி வாழ்ந்து கிட்டு இருக்கிற ஒரு ஜாலி திருட்டுக் கும்பல்.
ஊரெல்லாம் பெண்களை கடத்தி, கெடுத்து, கொலை செய்யும் ஒரு வில்லன்.
இந்த கடத்தல் கும்பலில் வகையாக மாட்டிக் கொண்டு விழிக்கும் ஒரு காவல் துறை அதிகாரி.
இந்த கடத்தல் கும்பலை பிடிக்க முனையும் மற்றொரு நேர்மையான காவல் துறை அதிகாரி.
இவர்களை வைத்துக் கொண்டு எதிர்பாராத திருப்பங்களுடம் பயணிக்கும் கதை.
ஆங்கிலத்தில் Donald E.Westlake என்பவர் எழுதிய Money for Nothing போல கதையின் சாயல். கண்டிப்பாக காப்பி இல்லை.
எதிர்பாராத திருப்பங்கள், நல்ல எடிட்டிங், இயல்பான நடிகர்கள் தேர்வு, தேவையில்லாத ஆய், ஊய் சண்டைகளோ, பஞ்ச டயலாக்கோ இல்லாமல் தமிழில் ஒரு புது முயற்சி என்றே நான் நினைக்கிறேன்.
என்ன பாடல்களும், பிண்ணனி இசையும் அவ்வளவாக எடுபடவில்லை. மற்றபடி பார்த்து ரசிக்கலாம்.

Subscribe to:
Posts (Atom)