கல்லூரியில் முதலாண்டு. அப்பத்தான் எப்படியோ தண்ணி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அதுக்கு துணையாய் இன்னும் 3 நண்பர்களும் சேர்ந்தார்கள். எல்லோருக்கும் இது முதல் முறை. நான், தாஜன், கோவிலூரார், கப்பு (இது பட்டப் பேருங்க)ன்னு நாலு பேரும் திட்டம் தீட்டினோம். முதல்ல காலேஜ் சீனியர்கள் கண்ணுல படாம காலேஜேலேர்ந்து 5 கிமீ தூரத்தில் இருக்க ஊருக்கு போய் சரக்கு வாங்கி அடிச்சிட்டு திரும்பணும். ஒரு வழியா அன்னைக்கு சாயங்காலம் மூணு பேரும் ஹாஸ்டல்லேர்ந்து எஸ்ஸாகி பஸ் பிடிச்சி பக்கத்தூருக்கு போயாச்சு. எல்லோரும் லுங்கி சட்டை தான். பாத்தா காலேஜ் பசங்கன்னு நாருக்கும் தெரியக் கூடாதாம்.இப்ப யாரு கடை வரை போயி வாங்கி வர்றதுன்னு தயக்கம். நான், தாஜன் மற்றும் கப்பு எல்லாம் பின் வாங்கவும் கோவிலூரார் மண்ணின் பெருமை காக்க தைரியமா கடைக்கு போய் 2 பியர் பாட்டில் வாங்கிகிட்டு வந்தார்.
ரெண்டு பாட்டில் பியரையும் லுங்கில ஒளிச்சி வச்சிகிட்டு அடுத்ததா தண்ணி அடிக்க இடம் தேடினோம். ஒயின் ஷாப்புலேயே பார் இருந்தாலும் உள்ளாற போய் அடிக்க எங்க எல்லோருக்கும் பயம். கடைசியா காலேஜுக்கு நடந்தே போறதுன்னும் போற வழில எங்கயாச்சும் மரத்தடில குடிச்சிக்கிறலாம்னு முடிவு பண்ணியாச்சு. பயத்தோட இது வரை யாருகிட்டயும் மாட்டிக்காத பெருமை வேற. ஊரை விட்டு விலகி வந்தாச்சு. ஒரு தென்னந்தோப்பு பக்கத்துல போற ஒத்தையடிப் பாதைல கொஞ்ச தூரம் ரோட்ட விட்டு விலகி போய் தண்ணி அடிக்க முடிவு செஞ்சோம்.
சரின்னு போயி பாட்டில்கள வெளில எடுத்தாத் தான் தெரியுது அந்த பாட்டில்கள தெறக்க, பாட்டில் ஓப்பனர் வேணும்னு. அந்த அத்துவானக்காட்டுல பாட்டில் ஓப்பனருக்கு எங்க போறது? திரும்ப கோவிலூரார் தான் சொன்னார் பல்லால கடிச்சி திறக்கலாம்னு. முயற்சி பண்ணி முடியல. அடுத்து தென்னந்தோப்பு வேலிக்காக நட்டிருந்த கல் தூணு கண்ணுல பட அதோட விளிம்புல வைச்சி கையால தட்டி திறக்கலாம்னு திட்டம். முதல் பாட்டில திறந்தாச்சு. ரெண்டாவது பாட்டில் திறக்கும் போது பாட்டில் விளிம்பு கொஞ்சம் உடைஞ்சு பியருக்குள்ள விழுந்துடுச்சி. சரின்னு முத பாட்டில ஆளுக்கு கொஞ்சம் சப்பி காலி பண்ணிட்டு கோவிலூரார் தன் சட்டைய வச்சி உடஞ்ச பாட்டில் பியர காலி பாட்டிலுக்குள் வடிகட்டி இறக்கவும் ஒரு வழியா கீழ சிந்தி மேல சிந்தி குடிச்சாச்சு.
மிச்சமிருந்த ஒண்ணு ரெண்டு சொட்ட தீர்த்தம் தெளிக்கிற மாதிரி மேல எல்லாம் தடவி கிட்டோம் நானும் கோவிலூராரும். வேற எதுக்கு - எல்லாம் ஹாஸ்டல்ல போயி நாங்க தண்ணி போட்டுருக்குறது எல்லோருக்கும் தெரிய வேணாமா அதுக்கு தான். ரெண்டு பியர நாலு பேரு கீழ சிந்தி மேல சிந்திக் குடிச்சா என்ன நடக்கும்னு அனுபவஸ்தவங்களுக்கு தெரியாதா என்ன? ஒண்ணும் நடக்கல. ஆனா ஹாஸ்டல் வரைக்கும் நல்ல பிள்ளைகளா போன நாங்க ஹாஸ்டல்ல புகுந்து விட்ட அலம்பலும் சலம்பலும் இருக்கே அப்பப்பா. பழைய படங்கள்ல கபாலி வரான்னு சொல்லிகிட்டு சந்தைல மக்கள் எல்லாம் அலறி அடிச்சிகிட்டு ரவுடிய பாத்து பயந்து ஓடுவாங்களே அது மாதிரி தெறிக்க வச்சிட்டோம். மறு நாள் முழுக்க ஹாஸ்டல்ல எங்க பத்தி தான் பேச்சு. என்னடா நேத்து தண்ணிய போட்டுட்டு செம ரகள பண்ணீட்டிங்களாம்ல என விசாரிப்புகள். பழக் கோஷ்டி எல்லாம் சும்மா எங்களைக் கண்டாலே மிரண்டு ஒதுங்கினார்கள்.
அன்னைக்கு சாயங்காலம் வெள்ளிக்கிழமை. ஹாஸ்டல்ல டிவி ஹால்ல ஒக்காந்து ஒலியும் ஒளியும் பாத்துகிட்டு இருந்தோம். அப்ப கோவிலூரார் கிட்ட பக்கத்துல இருந்தவன் ஒருத்தன் என்ன மாப்பிள்ளை நேத்து எவ்ளோ சரக்கடிச்சீங்க அந்த அளவுக்கு சலம்பல்ன்னு கேட்க அப்பாவியா கோவிலூரார் ரெண்டு பாட்டில் பியர் வாங்கி 4 பேரு நக்கி குடிச்ச கதைய கொஞ்சம் சத்தமா பெருமையா சொன்னாரு. கதை ஆரம்பிக்கும் போது கொஞ்ச பேரு தான் கதைய கேட்டுகிட்டு இருந்தாய்ங்க. கதை முடிக்கப் போற நேரத்துல மொத்த டிவி ஹாலும் அமைதியா எங்களத் தான் பாத்துகிட்டு இருந்துச்சி. கத முடியறப்போ இதுக்குத் தான் இந்த அலும்பு பண்ணீங்களா? லைட்ஸ் ஆப்ன்னு ஒரு கொரலு. அடுத்து நடந்தது தர்ம அடி மக்கா தர்ம அடி.
Thursday, November 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)

9 comments:
நீ இப்ப வரைக்கும் அவ்லோதான குடிப்ப
:-)))))))))))))
எல்லாம் குடுகுடுப்பை மாதிரி தானா?
ஏனயா என்ன வம்புக்கு இழுக்கறீங்க, நான் ரொம்ப நல்லவர்.
/*
ஏனயா என்ன வம்புக்கு இழுக்கறீங்க, நான் ரொம்ப நல்லவர்.
*/
உண்மைய வரவழைக்க ஏதாவது இப்படி பண்ண தான் வேண்டிய இருக்கு
மொத்துக்கப்பறம் பியர் குடிக்கறதை விட்டுட்டூங்களா. அப்படீன்னா பதிவோட தலைப்ப முதலும் கடைசியுமா குடிச்ச பியர்னு மாத்திருங்க.
// சின்ன அம்மிணி said...
மொத்துக்கப்பறம் பியர் குடிக்கறதை விட்டுட்டூங்களா. அப்படீன்னா பதிவோட தலைப்ப முதலும் கடைசியுமா குடிச்ச பியர்னு மாத்திருங்க.//
நாங்கள்லாம் தென்னாட்டுச் சிங்கமுல்ல... இப்ப கூட மனைவிகிட்ட மொத்து வாங்கிகிட்டே வெள்ளிக்கிழம ராமசாமி ஆகுறோம்ல
//சரின்னு போயி பாட்டில்கள வெளில எடுத்தாத் தான் தெரியுது அந்த பாட்டில்கள தெறக்க, பாட்டில் ஓப்பனர் வேணும்னு. //
ஆவ்வ்வ்வ்வ்... இப்படியும் ஒரு சோதனையா?
இன்றைக்குத்தான் உங்கள் பதிவுகளை முதல்முறையாகப் பார்த்தேன். நல்ல நகைச்சுவை. தொடரட்டும் தங்கள் பணி
Post a Comment