Tuesday, November 11, 2008

சிக்னல்ல மூச்சா

இதுல வர்ற கதாபாத்திரம் சத்தியமா நானில்லை.

இப்ப என் கூட ரூம்மேட் ரெண்டு பேரு. ஒருத்தரு தமிழர். இன்னோருத்தர் நான் முன்னமே சொன்ன ஆந்திராகாரர். கொஞ்ச நாள் கழிச்சி எதேச்சையா இன்னோரு ஜீவன பார்த்தோம். மெல்ல பேசிப் பார்த்தா அவர் இருக்கறதும் நாங்க இருக்குற அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்சுல தான். பாண்டிச்சேரிக்காரரு. பழகுவதற்கு அவ்ளோ இனிமை. வெள்ளந்தியா இருந்தாரு. பேசுன முத நாளே அவரு சொன்னாரு நான் தண்னி அடிப்பேன். இங்க கம்பனியே இல்லன்னு. எங்க ரூமுல மூணு பேருமே சோம பானம், சுரா பானம் எல்லாம் சாப்பிடுவோம்னு சொன்னதும் மனுசன் குசி ஆயிட்டாரு. இதுல ஆந்திராக்காரர் ஒரு பிரின்சிபிள் வைத்திருந்தார். அது என்னன்னா தன் கைக்காசு போட்டு தண்ணி வாங்கி அடிக்க மாட்டார். அதே நேரம் ஓசில கிடைச்சா சும்மா விட மாட்டார். இதை எல்லாம் புதுசா வந்தவர் கிட்ட ஏன் சொல்லி பயமுறுத்தனும்னு சொல்லி நாங்க ஒண்ணும் சொல்லல.

அந்த வாரம் வெள்ளிக்கிழமை சாயங்காலம். அபார்ட்மெண்ட் கதவை யாரோ தட்டுறாங்க. திறந்தா நம்ம பாண்டிச்சேரிக்காரரு. கைல ஒரு ப்ரவுன் பேகோட நிக்கிறார். உள்ள வேற என்ன? குதிரைக்கு ஊத்தற சரக்கு. வவ்வால் பிராண்ட். சரின்னு கச்சேரிய அன்னைக்கு பொழுதோட ஆரம்பிச்சோம். ஒரு நாலு ரவுண்டு போனதும் சொந்தக் கதை சோகக் கதை எல்லாம் பேச நான் அட்லாண்டா ஏர்போர்ட்டுல தண்ணி குடிக்க அலஞ்சதை பத்தி சொன்னேன். சொன்னதுக்கப்பறம் தான் ஓட்ட வாயிடா உனக்குன்னு தோணுச்சி. என்ன பண்ண? "தி டேமேஜ் ஈஸ் அல்ரெடி டன்" பாத்தீங்களா இப்ப இங்கிலீசல்லாம் கொஞ்சம் பழகிருச்சு.

அடுத்து பாண்டிக்காரரு எடுத்து விட்டாருங்க பாரு ஒரு கதைய. சிரிச்சு சிரிச்சே ஏறுனதெல்லாம் கப்புன்னு இறங்கிடுச்சி. இதாம் மேட்டர்.

அண்ணாச்சி அன்னைக்கு தான் அமெரிக்காவுல வந்து ஏர்போர்ட்ல இறங்கி இருக்காரு. இறங்கி வரும் போதே மூச்சா வந்திருச்சி. சரின்னு ஒரு டாய்லெட் பாத்து போயி மூத்திரப்பிறைல நின்னு ஜிப்ப கழட்டிட்டு நிமிரும் போது தான் பாத்திருக்காரு ஒரு சிகப்பு லைட்டு பிறைக்கு மேல எரியறத. இவர் ரொம்ப குழம்பி போய்ட்டார். இந்த ஊருல மூச்சா போறதுக்கு கூடல்ல இவனுங்க சிக்னல் வைச்சிருக்காங்கன்னு அடக்கி கிட்டு கொஞ்ச நேரம் லைட்டு பச்சையா மாற காத்திருந்திருக்காரு. ஒண்ணும் மாத்தமில்ல. சரி ஒரு வேளை அந்த சிக்னல் ரிப்பேரோன்னு இதுக்கு மேல பொறுக்க முடியாம திறந்த ஜிப்போட அடுத்த பிறைக்கு தாண்டி இருக்காரு. கொடும என்னன்னா அங்கனையும் ரெட் லைட்டு. இவரு நகந்தது தான் தாமசம். இவரு முத நின்ன பிறைலேர்ந்து உஸ்ன்னு ஒரு சத்தம். வெழவெழத்துப் போயிட்டாரு. இந்த ஊரு ரொம்ப ஸ்ட்ரிக்டாமே. நாம ஏதாச்சும் தப்பு பண்ணி போலீசு கீலிசு பிடிச்சு உள்ளாற போட்டுட்டா என்ன பண்ணன்னு யோசிச்சாலும் ரொம்ப அவசரம். அந்த நேரம் பாத்து ஆபத்பாந்தனா வேற ஒருத்தர் வந்து சும்மா சர்ருன்னு ரெட் சிக்னல்லயே மூச்சா போனத பார்த்தார். சரி தான் உலகமெல்லாம் கிமீ, கிலோன்னு இருக்கைல இங்க மட்டும் மைலு, பவுண்டுன்னு இருக்குறது போல இந்த ஊருல ரெட்டுல தான் போகணும் போலன்னு இவரும் போனாராம்.

நல்ல வேளை இவரு இந்த விசயத்த எங்க கிட்ட சொல்ற வரைக்கும் டிரைவிங் கிளாசோ இல்லை டிரைவிங் டெஸ்டோ எடுக்க போகலை. இல்லேன்னா இவர் மாத்திரம் ரெட் சிக்னல்ல போகலாம்னு சொல்லி கார எடுத்திருந்தா என்ன ஆயிருக்கும்?

(அந்த சிவப்பு லைட், ஆட்டோமேடிக் பிளஷ்க்காக சென்சார் லைட்)

15 comments:

ILA (a) இளா said...

//இந்த ஊருல ரெட்டுல தான் போகணும் போலன்னு இவரும் போனாராம். //

நல்ல ஆளுங்கய்யா..

குடுகுடுப்பை said...

சரியான நகைச்சுவை மூச்சா பாய்.

துளசி கோபால் said...

இன்னிக்குத்தான் உங்க பதிவுகளை மொதமுறையாப் பார்த்தேன்.

தூள் கிளப்பறீங்க.:-)))))

வாழ்த்து(க்)கள்.

நாநா said...

வாங்க இளா....

நாநா said...

என்ன குடுகுடுப்பையாரே. உங்க பதிவுகளெல்லாம் களை கட்டுது. இது ஏதோ என்னால முடிஞ்சது

நாநா said...

வாங்க துளசி கோபால். பாராட்டுக்கு நன்றி

Anonymous said...

ஹஹஹா :)

நாநா said...

சின்ன அம்மணி... வாங்க. என்ன கொஞ்ச நாளா இந்த பக்கம் ஆளையே காணோம்

குடுகுடுப்பை said...

ஒரு counter போடுடா, அப்புறம் நீயும் எல்லாரு பதிவுக்கும் போயி பாரு

நசரேயன் said...

அருமை.. நல்ல நகைசுவை

ஆட்காட்டி said...

ஈ படத்தை பாத்து அடிக்கச் சொல்லுங்க. அது சென்சரா?

நாநா said...

அதென்ன ஈ படம்?

நாநா said...

எனக்கு தெரிஞ்சதெல்லாம் சின்ன கவுண்டர் தான் குடுகுடுப்ப. ஏதேதோ செஞ்சி பாத்துட்டேன். ஒண்ணும் கதைக்காகல.

ஆட்காட்டி said...

ஆண்களுக்கான கழிவறைகளில் உள்ள சிறு நீர் கழிப்புத் தொட்டியினுள் ஈ படம் போட்டிருப்பாங்கள். குறி பார்த்து, வெளியே சிந்தாமல் அடிக்க.

சி தயாளன் said...

ஆங்...:-)