Sunday, November 16, 2008

அலிபாபான்னு ஒரு படம்

முதல்லயே சொல்லிர்றேன் என்னை அடிக்க வராதீங்க. போன வாரம் அலிபாபான்னு ஒரு படம் பார்த்தேன். எனக்கு பிடிச்சி இருந்தது. அந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்துக்கள் இங்கே.

சின்ன சின்னதா திருடி வாழ்ந்து கிட்டு இருக்கிற ஒரு ஜாலி திருட்டுக் கும்பல்.

ஊரெல்லாம் பெண்களை கடத்தி, கெடுத்து, கொலை செய்யும் ஒரு வில்லன்.

இந்த கடத்தல் கும்பலில் வகையாக மாட்டிக் கொண்டு விழிக்கும் ஒரு காவல் துறை அதிகாரி.

இந்த கடத்தல் கும்பலை பிடிக்க முனையும் மற்றொரு நேர்மையான காவல் துறை அதிகாரி.

இவர்களை வைத்துக் கொண்டு எதிர்பாராத திருப்பங்களுடம் பயணிக்கும் கதை.

ஆங்கிலத்தில் Donald E.Westlake என்பவர் எழுதிய Money for Nothing போல கதையின் சாயல். கண்டிப்பாக காப்பி இல்லை.

எதிர்பாராத திருப்பங்கள், நல்ல எடிட்டிங், இயல்பான நடிகர்கள் தேர்வு, தேவையில்லாத ஆய், ஊய் சண்டைகளோ, பஞ்ச டயலாக்கோ இல்லாமல் தமிழில் ஒரு புது முயற்சி என்றே நான் நினைக்கிறேன்.

என்ன பாடல்களும், பிண்ணனி இசையும் அவ்வளவாக எடுபடவில்லை. மற்றபடி பார்த்து ரசிக்கலாம்.

21 comments:

குடுகுடுப்பை said...

இங்கிலீசு கதி எல்லாம் படிக்கிறீயா?
ஆத்தாடி பெரிய ஆளாயிட்டியா நீயி

rapp said...

//இங்கிலீசு கதி எல்லாம் படிக்கிறீயா?
ஆத்தாடி பெரிய ஆளாயிட்டியா நீயி//

:):):)

rapp said...

நான் பாதி படம்தான் பார்த்தேன், சோ மீதி பாதி எப்டி இருந்துச்சுன்னு தெரியல.

thamizhparavai said...

வணக்கம் நண்பரே...
நானும் இரு தினங்களுக்கு முன் தான் 'அலிபாபா' பார்த்தேன். நானே இத்ற்கு விமர்சனம் எழுத நினைத்தேன்.சோம்பல்.
எனக்கும் மிகப் பிடித்திருந்தது படம். நல்ல கதை, அளவான நகைச்சுவை. பின்னணி இசை கூடப் பரவாயில்லை ரகம். முக்கிய அம்சம் நடிகர்கள் தேர்வு.
யார் அந்தப் புது இயக்குனர்? வசனம் உட்பட எல்லாமே நன்றாக இருந்தது.
அந்தத் 'தேர்ட் மேன்' கான்செப்டை, காமெடி போல் ஆரம்பித்து, அதையே கதையின் முக்கியப் புள்ளியாக ஆக்கியிருந்தது சூப்பர்.
படம் பார்த்து(ஒன் சிட்டிங்கில்) முடிக்கவும் ஒரு சந்தேகம் எழுந்தது. எது எதுவோ மொக்கைப் படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதுனாங்க.. ஒருத்தர் கூட இதைப் பார்க்கலையான்னு...?
நான் கூட படம் பார்க்காட்டி இந்தப் பதிவைப் படிக்கவே வந்திருக்க மாட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

எனக்கும் கூட பிடிச்சிருந்தது. தொந்தரவு பண்ணாம 2 மணிநேரம் ஓட்டி இருந்தார் இயக்குநர். ஸ்டார் வேல்யூ இல்லாததால ஓடலை போல!

நசரேயன் said...

எனக்கு இன்கலிபீசு படம் பாக்க அளவுக்கு அறிவு இல்ல
அலிபாவாவும் 40 திருடர்களுமா?

http://urupudaathathu.blogspot.com/ said...

தொரை இங்க்லிபீசு புக்கு எல்லாம் படிக்குது

http://urupudaathathu.blogspot.com/ said...

//rapp said...

நான் பாதி படம்தான் பார்த்தேன், சோ மீதி பாதி எப்டி இருந்துச்சுன்னு தெரியல.///

சோ எதுக்கு மீதி படத்த பத்தி சொல்லணும் ?? அவருக்கு வேற வேல இல்லியா ??
ஒன்னுமே புரியிலையே ??
ஹி ஹி ஹி

குடுகுடுப்பை said...

நீங்க எல்லாம் சொல்றதுனால நான் $2 க்கு ஒரிஜினல் டிவிடி வாங்கி படம் பாக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்

தருமி said...

எனக்கும் பிடிச்சிருந்தது. எழுதணும்னு நினச்சப்போ இன்னொரு தடவை பார்த்தா நல்லதுன்னு தோன்றியதாலே அப்படியே உட்டுட்டேன்.

கபீஷ் said...

// குடுகுடுப்பை said...
இங்கிலீசு கதி எல்லாம் படிக்கிறீயா?
ஆத்தாடி பெரிய ஆளாயிட்டியா நீயி

//
படிக்கிறீயா=படிக்கிறீங்களா
ஆளாயிட்டியா=ஆளாயிட்டிங்களா
நீயி=நீங்க, ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

// குடுகுடுப்பை said...
இங்கிலீசு கதி எல்லாம் படிக்கிறீயா?
ஆத்தாடி பெரிய ஆளாயிட்டியா நீயி

//
படிக்கிறீயா=படிக்கிறீங்களா
ஆளாயிட்டியா=ஆளாயிட்டிங்களா
நீயி=நீங்க, ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
//

ரொம்ப மருவாதிய திட்டிரீங்க என் நண்பனை

நாநா said...

எல்லோரும் வாங்க. நசரேயன் இது ஆங்கிலப்படமல்ல. தமிழ் படம் தான்.

நாநா said...

கபீஷ்,

குடுகுடுப்பை வாங்க போங்கன்னெல்லாம் என்னை கூப்பிட்டா வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டா மிருகம்னு பேர் வச்ச மாதிரி இருக்கும்.

ஹிஹிஹி

நாநா said...

தருமி. திரும்ப ஒரு தடவ பார்த்துட்டு சொல்லுங்க.

நாநா said...

தமிழ் பறவை...

அமர்க்கள தமிழ் திரை உலகத்தில் இப்படி அலட்டல் இல்லாத படங்கள் எடுபடாமல் போவது உண்டு. என்ன செய்ய? எல்லாம் காலக்கிரகம்

நாநா said...

பினாத்தலு...

ஸ்டார் வேல்யூ பார்த்தே வீணா போன சமூகம் நம்மது

நாநா said...

குடுகுடுப்பை மற்றும் உருப்படாதது அனிமா,

டானல்ட் இ. வெஸ்ட்லேக் புத்தகம் சம கலக்கலா இருக்கும். அவர பத்தி ஒரு பதிவு போடுறேன்

நசரேயன் said...

/*
எல்லோரும் வாங்க. நசரேயன் இது ஆங்கிலப்படமல்ல. தமிழ் படம் தான்.
*/
ம்.. ஹும்.. என்னத்தை சொல்ல
பதிவு உலகத்தை பாத்து சினிமா உலகம் மறந்து போச்சு.

நாநா said...

//ம்.. ஹும்.. என்னத்தை சொல்ல
பதிவு உலகத்தை பாத்து சினிமா உலகம் மறந்து போச்சு.//

இது ரொம்ப தப்பாச்சே

கபீஷ் said...

//குடுகுடுப்பை வாங்க போங்கன்னெல்லாம் என்னை கூப்பிட்டா வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டா மிருகம்னு பேர் வச்ச மாதிரி இருக்கும்//

குடுகுடுப்பை அப்படி சொல்லலாம், நான் அவர் சொன்னதை கரக்ட் பண்ணல. குடுகுடுப்பை சொன்னதை படிங்க. இவ்ளோ அப்பாவியா நீங்க?