Monday, November 24, 2008

கண்ணாமூச்சி ஏனடா?

கொஞ்சம் Father of the Bride, கொஞ்சம் Meet the Parents, கொஞ்சம் நவீன தமிழக காதல், கொஞ்சம் சிங்கப்பூர் லொகேசன், நிறைய காமடி கலந்து அடித்த ஒரு படம் தான் கண்ணாமூச்சி ஏனடா?

கதாநாயகன் பிரித்விராஜ் சிங்கப்பூரில் தான் சந்திக்கும் சந்தியாவுடன் காதலில் விழுகிறார். வழக்கம் போல காதலுக்கு பிருத்விராஜ் வீட்டில் எதிர்ப்பு. சரியென காதலுக்காக எல்லாம் துறந்து சந்தியாவுடன் இந்தியா வந்தால் இங்கே மாமனார் சத்யராஜுடன் மோதல். கலகலப்பாய் படம் போகிறது. தேவையே இல்லாமல் ராதிகா சத்யராஜ் மோதல் மற்றும் ஸ்ரீப்ரியாவை இடைவளிக்கப்பறாம் புகுத்தாமல் இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

சும்மா ஆய் ஊய் பஞ்ச் டயலாக் படங்கள் பார்த்து சலித்துப் போனதால் இம்மாதிரி அதிக இரைச்சல் இல்லாத படங்களை ரசிக்க முடிக்கிறது என நினைக்கிறேன். நக்கலும் நையாண்டியுமாய் வசனங்கள் நல்லா இருந்தன.

மக்கா நீங்க என்ன நினைக்கிறீங்க?

5 comments:

குடுகுடுப்பை said...
This comment has been removed by the author.
குடுகுடுப்பை said...

அதிக இரைச்சல் இல்லாத படங்களை ரசிக்க முடிக்கிறது என நினைக்கிறேன்.

அவனுங்க பேசரதே ஒரே இரைச்சலாத்தான் இருந்துச்சி எனக்கு

ச.பிரேம்குமார் said...

படம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடன் ஆன பிறகு இப்படி ஒரு விமர்சனம் எழுத ஏதேனும் சிறப்பு காரணம் இருக்க நாநா??

நான் போன வருடம் எழுதிய 'கண்ணாமூச்சி ஏண்டா' பற்றி பார்வை
http://premkumarpec.blogspot.com/2007/11/blog-post.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

tv ல இப்பத்தான் பார்த்தீங்களாக்கும்..?:)

நாநா said...

//படம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடன் ஆன பிறகு இப்படி ஒரு விமர்சனம் எழுத ஏதேனும் சிறப்பு காரணம் இருக்க நாநா??//

இப்ப தாங்க நான் படம் பார்த்தேன். என்ன செய்ய?