டானல்ட் இ வெஸ்ட்லேக். Donald E.Westlake
சும்மா ஹெடெக்கா எழுதுறதோ, மனோதத்துவம் எழுதுறேன்னு சொல்லி கொழப்புறதோ, உளவுத் துறை பற்றி எழுதுறேன்னு சொல்லி சும்மா அந்த துப்பாக்கி இந்த பீரங்கின்னு 40 பக்கத்துக்கு ஆயுதங்கள் பத்தி டெக்னிகல் தகவல்கள் கொடுக்கிறதோ, பயமுறுத்துறேன் பேர்வழின்னு கண்டதை பத்தி எழுதுறதோ கிடையாது இவர். நல்ல நகைச்சுவை உணர்வு, இயல்பான எளிதான கதை ஓட்டம், சிக்கலில்லாத கதைக்கரு, முக்கியமாக எளிதில் புரியும் அதிகம் கஷ்டப்படாத வார்த்தைப் பிரயோகங்கள் என நல்லா இருக்கும். (அட எனக்கே இவர் கதை படிச்சதும் புரிஞ்சிடுச்சின்னா பாருங்களேன். அதும் ஒரு தடவ கூட டிக்ஸ்னரி தேடாம...)
முதலில் என்னை ஈர்த்தது இவர் எழுதிய டிரவுண்ட் ஹோப்ஸ் (Drowned Hopes) புத்தகம் தான். செம ரகளையா இருக்கும்.
இவரின் கதாபாத்திரங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும். முக்கியமா இவரது ஒரு ஹீரோ பேரு - ஜான் டார்ட்மண்டர். (John Dartmunder)
ஹீரோ ஒரு திருடன். இவன் அதிர்ஷ்டம் எப்படின்னா "விடியா மூஞ்சி வேலைக்கு போனா வேலை கெடச்சாலும் கெடக்கும். கூலி கெடக்காது"ன்னு நம்மூரு பக்கம் ஒரு சொலவட சொல்லுவாங்களே அது மாதிரி. தொட்டது எதும் துலங்காது. இந்த ஹீரோவும் அவரோட கூட்டாளிங்களும் செய்கிற பல திருட்டு வேலைகள் தான் கதைகள்.
இவரே இன்னும் பல புனைப்பேர்கள்ல எழுதி இருக்கார். ரிச்சர்ட் ஸ்டார்க் (Richard Stark), டக்கர் கோ (Tucker Coe), சாமுவேல் ஹால்ட் (Samuel Holt), எட்வின் வெஸ்ட்(Edwin West).
இவரது நாவல்கள் ஹாலிவுட்டில் திரைப்படங்களாக வந்துள்ளன. புகழ் பெற்ற படங்கள் சில.
வாட் ஈஸ் தி வொர்ஸ்ட் தெட் குட் ஹேப்பன் (What is the worst that could happen)
பே பேக் (Pay Back).
தயவு செஞ்சி படிச்சி பாருங்க... மேலும் தகவல்களுக்கு http://www.donaldwestlake.com/
Monday, November 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
எங்கள மாதிரி இங்கிலீசு, தெரியாதவங்க எப்படி படிக்கறது.
/// குடுகுடுப்பை said...
எங்கள மாதிரி இங்கிலீசு, தெரியாதவங்க எப்படி படிக்கறது.
//////
உங்க கூட நானும் கூட்டு சேர்ந்துக்கிறேன்..
ஹி ஹி எனக்கும் இங்க்ளிபீசு படிக்க தெரியாது.
thanks for the recommendation
வருகைக்கு நன்றி - குடுகுடுப்பை, அனிமா மற்றும் டாக்டர் ருத்ரன்
Post a Comment