Saturday, October 18, 2008

முதலில் நன்றி - நண்பர் குடுகுடுப்பைக்கு.

முதலில் நன்றி - நண்பர் குடுகுடுப்பைக்கு.

உழைத்துக் களைத்து ஓடாய்த் தேய்ந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் ஒரு மாலையில் செல்லில் அழைத்தது நம்ம குடுகுடுப்பை.

"டேய். நான் பிளாக் எழுதலாம்னு இருக்கேன்"ன்னு போட்டாரு ஒரு குண்ட.

"என்னடா திடீருன்னு என்னமோ நான் மொத்தமா இந்தியா போய் செட்டில் ஆகப் போறேங்கிற மாதிரி ரொம்ப ஈசியா சொல்றியே பிளாக் எழுதப் போறேன்னு. ஏண்டா இந்த கொலை வெறி?"

(மக்கா... என்னால முடிஞ்ச அளவுக்கு குடுகுடுப்பை கிட்ட இருந்து இந்த வலைப்பதிவாளர் உலகத்த காப்பாத்த முயற்சி பண்ணினேன். ஆனா என்ன செய்ய... தசாவதாரம் படத்துல 12ம் நூற்றாண்டுல கடல்ல போடப்பட்ட ரங்க நாதர் சுனாமியால வெளில வந்த மாதிரி குடுகுடுப்பைக்குள்ள ஏதோ சுனாமி அடிச்சி இந்த கற்கால வலைப்பதிவாளர் ஆர்வம் வெளில வந்துருச்சு.)

அதுக்கெல்லாம் அண்ணன் அசர மாதிரி தெரியல. நான் கொலை வெறி அப்படி இப்படின்னு பேசினதெல்லாம் அண்ணன் காதிலயே வாங்கிகாம ஒரு ரெண்டு மூணு பேருங்கள எடுத்து விட்டு இதெல்லாம் எப்படி என் பிளாக்குக்கு பேருன்னாரு. அவரு சொன்னதுல எல்லாமே ஒரிஜினல் மேட்டர். எல்லாம் காப்பி ரைட் வாங்கற அளவு அசத்தலான பேரு. அதனால அந்த பேருங்கள இங்க தர முடியாது மன்னிக்கனும். அதுல ஒண்ண நான் அருமை, ஆகா, ஓகோன்னெல்லாம் புகழ அவரும் சரிடா இதாம் என் பிளாக் பேரு. எழுதிட்டு உனக்கு சொல்றேன் படிச்சு பாருன்னாரு. ரெண்டு நாளாச்சு. ஒண்ணும் சத்தமே காணோம்.

என்னடா இது ஆழிக்காற்றாய், ஊழிக் கடலாய், சுனாமியாய் பொங்கி வரும் எழுத்து தாகத்தோடு திரிந்த நண்பரிடமிருந்து ஒரு தகவலும் இல்லியே, ஒரு வேளை, அவங்க மேலிடத்திலேர்ந்து அனுமதி கிடைக்கலியோன்னு யோசிச்சு கூப்பிட்டேன். இல்லடா பிளாக் ஆரம்பிக்கிறது அலுவலகத்தில் இருந்தா இல்லை வீட்டில் இருந்தான்னு தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்னார் குடுகுடுப்பை.

அட போடா. எங்க இருந்து ஆரம்பிச்சா என்ன? அலுவலகம்னா கொஞ்சம் வசதி - ஒரே ஒரு மேலாளர் தான். (வீட்டிலன்னா பொண்டாட்டி பிள்ளைன்னு ரெண்டு மேலாளர்). அலுவலகம்னா வேலை அவ்வளவா இருக்காது (வீட்டில அத்த எடு, இத்த வை, சொல்லிக் கொடு, சொறிஞ்சி விடுன்னு குடும்பிக்கு பல வேலை). அலுவலகம்னா ஒண்ணுக்கு ரெண்டுக்கு போறது, டீ, காப்பிக்கு போறது, யாராச்சும் டெஸ்க் பக்கம் வரும் போது பிசியா இருக்குற மாதிரி பம்முறதுன்னு போக மிச்ச நேரம் இருக்கும். (வீட்டுல குடும்பி வேலை எல்லாம் முடிச்சி கொஞ்சம் கம்ப்யூட்டர்ல உட்காரப் போகும் போது தான் எவனாச்சும் போன் பண்ணுவான், இல்லை ஏதாச்சும் ஒரு ரூம் ரொம்ப நாளா க்ளீன் பண்ணாம கிடக்குறது நம்ம மேலிடத்து கண்ணுக்கு படும், இல்லை அரகர சிவசிவான்னு மசமசன்னு ஒரு தூக்கம் கண்ணை அசத்தும்). இப்படி இன்ன பிற வசதி வாய்ப்புகள் பற்றி பேசி அவரை இன்னும் கொஞ்சம் கொசப்பி போனை வைச்சாச்சு.

அதுக்கு அடுத்த நாளே குடுகுடுப்பை கூப்பிட்டு சொல்றார். டேய் பிளாக் போட்டாச்சு. படிச்சி பாருன்னு. சும்மா ஜிவ்வுன்னு ஆயிருச்சு. இருக்காதா பின்னே? ஒரு வேளை இவன் பெரிய எழுத்தாளார் ஆகிட்டா, அவன் செத்தப்பறம் அவனோட நண்பன் நான்னு பேட்டி எல்லாம் கொடுக்க எனக்கு வசதியா இருக்கும்ல? அடுத்து அவர் சொன்ன மேட்டர் என் மனச ரொம்பவே பாதிச்சிருச்சு. என் பிளாக்கு பேரு குடுகுடுப்பைன்னார். என்னடா இப்படி ஒரு குண்ட போடுறே? என்னென்னமோ இலக்கிய தரமான பேரெல்லாம் என்கிட்ட சொன்னியேடா? அத்தெயல்லாம் உட்டுட்டு உனக்கேண்டா புத்தி இப்படி போச்சுன்னா அதெல்லாம் பின்னாடி இலக்கியத் தரமா எழுதறதுக்காக ரிசர்வ் பண்ணி வச்சிருக்கண்டா. இப்ப நான் போடுற மொக்கைக்கு இது போதும்ண்ணுட்டான். பொசுக்குன்னு போயிடுச்சி. (அப்பறம் அவரு எழுதுனத எல்லாம் பாத்தப்ப பேசாம பிச்சைக்காரன் வாந்தின்னு பிளாக்குக்கு பேரு வைக்கலாம்னு தோணிச்சு. அந்த நெனப்பு வந்த உடனேயே நான் அந்த பிச்சைக்காரன் வாந்திங்கிற பேர என் எதிர்கால இலக்கியத் தரமான எழுத்துக்களுக்காக நான் ரிசர்வ் பண்ணி வச்சிருக்கது வேற விசயம்)

டேய் டேய் இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா இல்லயா? நன்றி குடுகுடுப்பைக்கு எதுக்குன்னு சொல்லாமலே சும்மா சுத்தி சுத்தி சிங்கி அடிச்சி இழுத்துகிட்டே போறியேன்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது. குடுகுடுப்பை எழுதறத பாத்து தான் நானும் பிளாக் எழுதலாம்னு எனக்கு இன்ஸ்பிரேசன் வந்ததே. நன்றி அவருக்கு அதுக்கு தான்.

அட இவரெல்லாம் எழுதும் போது நாம ஏன் எழுதக் கூடாதுன்னு தான் இன்ஸ்பிரேசன். நான் அவர விட பெரிய ஆளு, பெரிய எழுத்தாளருன்னு நெனப்பு வேற. காரணம் வேற ஒண்ணுமில்லை. டவுசர் போடுற வயசுல எனக்கு கொஞ்சம் தகிரியம் அதிகம். தகிரியம்ன்னா ஏதோ ஓடுற பாம்ப பிடிப்பேன், தனியா ராத்திரி சுடுகாட்டு பக்கம் போய் வருவேங்கிற மாதிரி தகிரியம் எல்லாம் கிடையாது. எல்லாம் வாய் சவடால் தான். வாத்தியார் கிட்ட சந்தேகம் கேட்கிறது, அப்பவே ஊரு லைப்ரரிலே தனியா போய் உட்கார்ந்து புத்தகம் படிக்கிறது, பெருசுக ஏதாச்சும் சொன்னா எதித்து வாயாடுறது இது மாதிரி தகிரியம் தான். இந்த லட்சணத்துல எரியறதீயில எண்ணைய ஊத்தற கதையா வந்து சேர்ந்தாரையா ஒரு தமிழ் அய்யா. இவரு தான் என்னைய ஏத்தி விட்டாரு. நல்லா பேசுறேயே நம்ம இஸ்கோலு பேச்சுப் போட்டில கலந்துக்கன்னு. அதுல ஆரம்பிச்சி அவரு பேச்ச கேட்டு கவித புத்தகமெல்லாம் படிச்சி, கவிஞரா என்னை நானே கற்பனை பண்ணிக்கிட்டு இருந்ததால வந்த தலக்கனம் தான் நானு குடுகுடுப்பைய விட எழுதுறதுல ஒசத்தின்னு எண்ணம் வர காரணம்.

இதாம் இந்த வங்கொடுமைக்கு காரணம்.

7 comments:

குடுகுடுப்பை said...

இதப்பாருடா கொடுமையா ஒப்பீட்டு பாக்க வேற ஆளெ உனக்கு கெடக்கலயா.
நிறைய எழுத வாழ்த்துக்கள்

நசரேயன் said...

உங்களையும் இந்த சந்தைக்கு இழுத்து வந்த குடுகுடுபையாருக்கு நன்றி.

உண்மைய ஒளிவு மறைவு இல்லமா சொன்னிங்க. மனுசனை இது மேல யாருமே கேவலப்படுத்த முடியாது :):)

அது சரி said...

//
"என்னடா திடீருன்னு என்னமோ நான் மொத்தமா இந்தியா போய் செட்டில் ஆகப் போறேங்கிற மாதிரி ரொம்ப ஈசியா சொல்றியே பிளாக் எழுதப் போறேன்னு. ஏண்டா இந்த கொலை வெறி?"
//

பாவம் இன்டியா. கொஞ்சம் இரக்கம் காட்டக்கூடாதா?

//
மக்கா... என்னால முடிஞ்ச அளவுக்கு குடுகுடுப்பை கிட்ட இருந்து இந்த வலைப்பதிவாளர் உலகத்த காப்பாத்த முயற்சி பண்ணினேன். ஆனா என்ன செய்ய...
//

ஆமா, எல்லாம் முடிஞ்சி போன பெறவு சொல்லுங்க..இதெல்லாம் கொஞ்சம் முன்னாடி செஞ்சா என்ன?

//
இல்லடா பிளாக் ஆரம்பிக்கிறது அலுவலகத்தில் இருந்தா இல்லை வீட்டில் இருந்தான்னு தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்னார் குடுகுடுப்பை.
//

என்னா ஒரு எளக்கிய சிந்தனை!

//
ஒரு வேளை இவன் பெரிய எழுத்தாளார் ஆகிட்டா, அவன் செத்தப்பறம் அவனோட நண்பன் நான்னு பேட்டி எல்லாம் கொடுக்க எனக்கு வசதியா இருக்கும்ல?
//

ஆஹா, நல்ல எதிர்கால திட்டத்தோட தான் இருக்கீங்க :0)

//
அடுத்து அவர் சொன்ன மேட்டர் என் மனச ரொம்பவே பாதிச்சிருச்சு. என் பிளாக்கு பேரு குடுகுடுப்பைன்னார்
//

உங்களை மட்டுமில்ல, ரொம்ப பேரை பாதிச்சிட்டதா நூஸு!

//
குடுகுடுப்பை எழுதறத பாத்து தான் நானும் பிளாக் எழுதலாம்னு எனக்கு இன்ஸ்பிரேசன் வந்ததே. நன்றி அவருக்கு அதுக்கு தான்.
//

ஆஹா, ஒரு குருப்பாதான்யா கெள்ம்பிருக்கீங்க!

இப்பவே கண்ண இருட்டிக்கிட்டு வருதே...

//
அதுல ஆரம்பிச்சி அவரு பேச்ச கேட்டு கவித புத்தகமெல்லாம் படிச்சி, கவிஞரா என்னை நானே கற்பனை பண்ணிக்கிட்டு இருந்ததால வந்த தலக்கனம் தான் நானு குடுகுடுப்பைய விட எழுதுறதுல ஒசத்தின்னு எண்ணம் வர காரணம்.
//

ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்கய்யா..

(லைட்டா ஒரு டவுட்டு...குடுகுடுப்பைக்காரரு சொன்ன பச்ச ஜீன்ஸு பார்ட்டி நீங்க தானா?)

நாநா said...

//(லைட்டா ஒரு டவுட்டு...குடுகுடுப்பைக்காரரு சொன்ன பச்ச ஜீன்ஸு பார்ட்டி நீங்க தானா?)//

பச்ச ஜீன்ஸ் பார்ட்டி நானு இல்லேங்க சாமியோவ். நானெல்லாம் காலேசு படிக்கும் போது ஜீன்சே போட்டதில்லீங்கோவ்.

குடுகுடுப்பை said...

//
பச்ச ஜீன்ஸ் பார்ட்டி நானு இல்லேங்க சாமியோவ். நானெல்லாம் காலேசு படிக்கும் போது ஜீன்சே போட்டதில்லீங்கோவ்.//

மதுரை வாங்கின ரெண்டு கிலோ ஜட்டியோட சரி.

மங்களூர் சிவா said...

நிறைய எழுத வாழ்த்துக்கள்

நாநா said...

வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் நன்றி.