Tuesday, October 21, 2008

யோகர்ட்டும்(Yogurt) தமிழனின் தயிரும்

அமெரிக்கா வந்த புதிது. நான் அப்போது மாமிசம் உண்பவனல்ல. முட்டை மட்டும் தான். வந்து சேர்ந்த ஊரில் நான் தான் 5 ஆவது இந்தியன். முதலாமவர் அங்கிருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளர். இன்னும் ரெண்டு பேரு பக்கத்து ஊர் பல்கலைக்கழகத்தில் படித்து இப்போது தான் இங்கே வேலைக்கு சேர்ந்திருப்பவர்கள். நாலாவது ஆள் எனக்கு ஒரு வாரம் முன்னாடி எனது அலுவலகம் மூலமாகவே இங்கு வேலை கிடைத்து வந்திருந்த ஒரு ஆந்திரா நண்பர். முதல் மூவரில் விரிவுரையாளார் கொஞ்சம் வயதானவர். குடும்பம், குழந்தைகள் என இங்கேயே ரொம்ப காலமாய் இருப்பவர். அடுத்த இரண்டு பேரும் மூணு நாலு வருசம் இங்கே படித்ததால் கொஞ்சம் அமெரிக்கனைசடு ஆன இந்தியர்கள். நம்ம ஆங்கில புலமையும் கம்மி.

காலேசுல எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இஞினியரிங் படிச்சாலும் ஆங்கில கம்யூனிகேசன் ரொம்ப தடுமாறும். இருக்காதா பின்னே? காலேஜ்ல லெக்சரரே "அந்த எலக்ட்ரானு இந்த டையொடு வழியா போயி, அந்த டியூப்ல இருக்க ஒரு தகட்டுல மோதின்னு..." பாடம் நடத்துவார். அடுத்து வேலை சென்னைல டிரைனியா. மீட்டிங் ஏதாச்சும் வந்தா அனுபவஸ்தர்க பேசுவாங்க. நமக்கு பேச வாய்ப்பே கிடைக்காது. கிடைச்சாலும் போன்ல அந்த பய புள்ளக என்ன பேசுதுன்னு ஒண்ணும் விளங்காது. இந்த லட்சணத்துல அமெரிக்கா வரதுக்காக இன்டர்வியூ பண்ணினவர் நம்மூரு காரரு ஒருத்தருங்கறதால எப்படியோ சமாளிச்சாச்சு. டெக்னிகலா பேசுறதெல்லாம் புரியும். மத்ததெல்லாம் சும்மா இடமும் வலமுமா தலை அசைச்சோ இல்ல, மையமா ஒரு அசட்டு புன்னகைலயோ சமாளிக்கிறது தான்.

இரண்டு பெட்ரூம் அபார்ட்மெண்ட். ஆந்திராக்காரர் பறப்பன, ஊர்வன, மிதப்பன, நீந்துவன என எல்லாம் சாப்பிடுவார். அதனால் அவருக்கு அதிகம் பிரச்சனை இல்லை. எனக்குத் தான் பசி பசி பசி. ஒரே பசி. அது நாள் வரை அம்மா சமையல், காலேஜ் ஹாஸ்டல் மெஸ், அல்லது ரோட்டோர புரோட்டாக்கடை, சென்னையில் பணி புரிந்த போது திரும்ப மெஸ் என சாப்பாடு ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை. அதனால் சமையல் பற்றி எல்லாம் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஒரு வழியாக முதல் நாள் ஏதோ பிரட், ஜாம் சாப்பிட்டு ஓட்டி விட்டேன். அன்று இரவே அம்மாக்கு போன் போட்டு குக்கரில் சாதம் எப்படி வைப்பது என தெரிந்து கொண்டு வெற்றிகரமாக சாதம் வைத்தாகி விட்டது. என்னத்தை ஊற்றிச் சாப்பிட? வெறும் சோறை எப்படி தின்பது? அப்பத்தான் நம்ம ஆந்திரா நண்பர் ஒரு ஐடியா சொன்னார். பக்கத்துல இருக்க கடைக்கு போய் தயிர் மட்டும் வாங்கி வருவோம். எங்கிட்ட கொஞ்சம் சாதப் பொடி, ஊறுகாய் இருக்குன்னார். கடை கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் வீட்டுல இருந்து. அப்பத்தான் அமெரிக்கா வந்திருந்ததால காரெல்லாம் கிடையாது. நட ராஜா சர்வீசு தான்.

சரின்னு கடைக்கு போய் தேடு தேடுன்னு தேடினோம் தயிர. ம்ஹீம். அகப்படல. தயிர இங்கிலீசுல கர்டு(Curd)ன்னு தான சொல்லுவோம்னு அங்க வேலை பார்க்கிற ஒரு பொண்னு கிட்ட போயி கேட்டும் பார்த்தோம். அது முழிச்ச முழிய பாத்தா கர்டுன்னா இந்தூருல ஏதோ கெட்ட வார்த்தையாட்டம் இருக்குன்னு நெனச்சுகிட்டு என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு திகைச்சு போய் நின்னோம். ஒண்ணும் விளங்கல. சரி நமக்கு இந்த ஊருல தெரிஞ்ச ஒரே ஆளுக அந்த காலேஜ் பசங்க தான் அவங்கள போன போட்டு கேட்போம்னு சொல்லி பார்த்தா அவனுங்க போன் நம்பர் வீட்டுல இருக்கு. திரும்பி வா வீட்டுக்கு. வந்து போன போட்டா அவனுங்க போனுலயே சிரிக்கிறானுக. இந்தூருல தயிர கர்டுன்னு சொல்ல மாட்டாங்க. கடைல போயி யோகர்ட்டுன்னு தேடுன்னாங்க.

சரி திரும்ப நடைய கட்டு கடைக்கு. இப்பவே மணி 8 ஆச்சு. ஊதக் காத்தடிக்குது. குளிரு வெடவெடங்குது. பசி வேற. ஒரு வழியா அடிச்சி பிடிச்சு கடைல போயி யோகர்ட்டுனு தேடி ஒரு டப்பாவ தூக்கி கிட்டு கையோட ஒரு பாக்கட் சிப்ஸ் வாங்கிகிட்டு வந்தாச்சி. இப்ப மணி 9 ஆச்சு. இருட்டு. குளிரு, பசி. வீட்டுக்கு வரதுக்குள்ள உடெம்பெல்லாம் வெறச்சி போச்சி. அதீத பசில கண்ணு கட்டுது. அத்தோட இந்த கர்ட், யோகர்ட், தயிரு குழப்ப டென்சன மறக்க வெறும் வயித்துல அடிச்ச ரெண்டு மூணு தம்மு வேற.

ஆவலா வந்து இருக்குற சோத்த அப்படியே ரெண்டா வகுந்து ஆளுக்கொரு தட்டுல சோத்த போட்டு நல்லா தயிர ஊத்தி பெசஞ்சாச்சு. தயிர அப்படியே பாக்க கெட்டியா நம்மூரு எருமைத் தயிரு மாதிரி இருக்க, கொஞ்சம் ஜாஸ்தியாவே விட்டு நல்லா பெசஞ்சி பக்கத்துல ஊறுகாய் வச்சிகிட்டு எடுத்து வாயில வச்சா....

வாந்தியே வந்துரும் போல ஆயிருச்சு. ஒரே இனிப்பு. ஒண்னும் விளங்கல எங்களுக்கு. என்னத்த பண்ண? சோறும் மிச்சமில்லை. எல்லா சோத்தையும் போட்டு பெசஞ்சாச்சு. எனக்கான அழுகை கண்ண முட்டுது. விதியேன்னு எல்லாம் எடுத்து குப்பைல போட்டுட்டு வெறும் சிப்சும் தண்ணியும் குடிச்சிட்டு படுத்துட்டோம். மறு நாள் ஆபீசுல போய் அந்த காலேஜு பய புள்ளகள ஏண்டா இந்த ஊரு தயிரு இப்படி இனிக்குதுன்னா அவனுங்க இடி இடின்னு சிரிக்கிறானுங்க. நீங்க பிளைன் யோகர்ட் பாத்து வாங்கணும்டா. ஏதாச்சும் பிளேவர் யோகர்ட் வாங்கி இருப்பீங்கன்னு. அப்பறம் கடைல போயி பாத்தா தான் தெரியும் இந்தூரு பக்கிக ஸ்ட்ராபரி, ராஸ்பெரின்னு என்னென்ன பழம் இருக்கோ எல்லாத்தையும் தயிர்ல கலந்து வச்சிருக்குகன்னும் நாங்க அன்னிக்கு ராத்திரி வாங்கி வந்தது வெனிலா யோகர்ட்டுன்னும்.

41 comments:

குடுகுடுப்பை said...

முட்ட முட்ட குடிச்சிட்டு சாப்பிட்டா எல்லாம் அப்பிடிதான் தெரியும் நாநா

இனியா said...

அய்யா முத்துச்சிப்பி,
அமெரிக்காவில் எங்கே இருக்கின்றீர்கள்! நல்ல பதிவு

நசரேயன் said...

அருமை நாநா ..
தொடரட்டும் முயற்சிகள்

நாநா said...

//முட்ட முட்ட குடிச்சிட்டு சாப்பிட்டா எல்லாம் அப்பிடிதான் தெரியும் நாநா//

அட அப்பெல்லாம் பசி தான் பிரதானமா தெரிஞ்சது. அப்பறமா தான் தண்ணி போட்டுட்டு சாப்பிட்டா என்னவா இருந்தாலும் ஓகேன்னால்லாம் கத்துகிட்டோம்

நாநா said...

//அய்யா முத்துச்சிப்பி,
அமெரிக்காவில் எங்கே இருக்கின்றீர்கள்! //

இப்ப இருக்குறது நியூ ஜெர்சி. நீங்க எங்கன இருக்கீக?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) அய்யோ பாவம்..
சிரிப்பானும் அய்யோபாவமும் என்ன ஒரு முரணான பின்னூட்டம் என்னுடையது ....:)

மங்களூர் சிவா said...

//
முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) அய்யோ பாவம்..
சிரிப்பானும் அய்யோபாவமும் என்ன ஒரு முரணான பின்னூட்டம் என்னுடையது ....:)
//
ரிப்ப்பீட்டு

இனியா said...

நானும் ஜெர்சி தாங்க... ஒரு ஆண்டா இங்க தான் இருக்கிறேன்.
முன்னாடி டெலாவார் என்ற ஊரில் ரொம்ப நாள் இருந்தேன்.

Kasi Arumugam said...

buttermillkன்னு சின்ன கார்ட்டன்ல விப்பான், கிட்டத்தட்ட நம்மூரு தயிராட்டவே இருக்கும். யோகர்ட் பிளைனாவே இருந்தாலும் பாவம்தான்.

நாநா said...

//buttermillkன்னு சின்ன கார்ட்டன்ல விப்பான், கிட்டத்தட்ட நம்மூரு தயிராட்டவே இருக்கும். யோகர்ட் பிளைனாவே இருந்தாலும் பாவம்தான்.//

அது நம்மூரு மோர்.

குடுகுடுப்பை said...

சூடான இடுகையில்
யோகர்ட்டும்(Yogurt) தமிழனின் தயிரும்
நாநா

வாழ்த்துக்கள்

Kasi Arumugam said...

அய்யா அ.கொழுந்து. நம்மூரு மோருகூடத்தெரியாமலா இருப்பாங்க:) அங்க மோரு வாங்கிப்பாருங்க, அப்புறம் பேசுங்க!

சின்னப் பையன் said...

:-))))))

வடுவூர் குமார் said...

நடைராஜா சர்வீசா?
அதைத்தான் நான் இப்ப்போது துபாயில் பண்ணிக்கொண்டு இருக்கேன். :-)

நாநா said...

இனியா, நசரேயன், முத்துலட்சுமி-கயல்விழி, சிவா, காசி, ச்சின்னப்பையன், குமார் எல்லோருக்கும் வணக்கம். தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி

சதங்கா (Sathanga) said...

'அனுபவம் புதுமை' ... பதிவு அருமை :)))))

Anonymous said...

அதெல்லாம் சரி, இப்பயாச்சும் சமையல் கொஞ்சம் செய்யத்தெரியுமா :)

நாநா said...

//அதெல்லாம் சரி, இப்பயாச்சும் சமையல் கொஞ்சம் செய்யத்தெரியுமா :)//

கொஞ்ச நாள்லயே சமயல் கத்துகிட்டாச்சு. இப்ப கல்யாணம் ஆனதால அப்பப்ப சமயல் கட்டுல என் கை வரிசைய காட்டி மனைவி மக்கள மிரள வைக்கிறதும் உண்டு

நாநா said...

சரி மக்கா இப்படி மொக்கயா காமடி எழுதுனதுக்கு இவ்ளோ பின்னூட்டம் போடுறீங்க. ஆனா மெய்யாலுமே ஃபீல் பண்ணி எழுதுன வெடி தேங்காய்க்கு பின்னூட்டமே அவ்வளவே இல்லியே ஏன்? சும்மா தெரிஞ்சிகிறத் தான் கேக்கிறேன்

rapp said...

ஹா ஹா ஹா, சூப்பர்:):):)

rapp said...

////
முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) அய்யோ பாவம்..
சிரிப்பானும் அய்யோபாவமும் என்ன ஒரு முரணான பின்னூட்டம் என்னுடையது ....:)
//
ரிப்ப்பீட்டு//

சிவாண்ணே, நீங்க என்ன அர்த்தத்தில் இதுக்கு ரிப்பீட்டு போட்டீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............:):):)

Anonymous said...

இப்போது சிரிப்பாக இருந்தாலும்..அந்த நேரத்தில் அழுகையாக வந்திருக்கும்..இல்லையா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெடிதேங்காய் எப்ப வந்ததுன்னு தெரியலயே.. கொஞ்ச நாள் முன்ன தான் தமிழ்ப்ரியன் எழுதி அது பத்தி படிச்சேன்.. இப்ப தேடிப் பார்த்தேன் 3 பாகமா போட்டிருக்கீங்க.. நாங்க எல்லாம் தொடர் .. நீளமான கட்டுரை இதெல்லாம் படிக்கறதே பெரும்பாடு அதுல பின்னூட்டம் வேறயா..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் உனக்கு என்னம்மா புரிஞ்சது என் பின்னூட்டத்துல அதுல ரிப்பீட்டு போடக்கூடாதா..?

rapp said...

me the 25th

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெயிட் செய்துட்டே இருப்பியா ராப்.. :)
எனக்குத்தெரியும் நீ ஏன் இந்த போஸ்டுக்கு ஓடி வந்திருப்பேன்னு.. உங்கூர்லயும் தமிழ் நாட்டு தயிர் மாதிரி நல்ல சாப்பாடு கிடைக்காது அதானே..

rapp said...

//ராப் உனக்கு என்னம்மா புரிஞ்சது என் பின்னூட்டத்துல அதுல ரிப்பீட்டு போடக்கூடாதா..?//


//:) அய்யோ பாவம்..//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நீங்க பின்னூட்டம் போட்டுட்டு இப்படி

//சிரிப்பானும் அய்யோபாவமும் என்ன ஒரு முரணான பின்னூட்டம் என்னுடையது //

எழுதினது சரி. இவரு பாத்தீங்களா, ஜாலியா பின்னூட்டம் எதுவுமே போடாம ரிப்பீட்டே போடறார்:):):)

rapp said...

ஹி ஹி, நாலு எடத்துல கால் செஞ்சுரி அடிக்கறதில் ஒரு ஆனந்தம். இப்போ மைபிரண்ட் வேற பார்முக்கு பழயபடி வந்து எல்லா இடத்துலயும் மீ த பர்ஸ்ட் போட்டிடறாங்க:):):) அதான்:):):)

rapp said...

//உங்கூர்லயும் தமிழ் நாட்டு தயிர் மாதிரி நல்ல சாப்பாடு கிடைக்காது அதானே//

எனக்கு இவர் மாதிரி பிரச்சினை இல்ல. ஏன்னா, ஏதாவது ஒரு வார்த்தையாவது பிரெஞ்சுல தெரிஞ்சிருந்தாத்தான:):):) அதால மொதோ ரெண்டு தரம் இவர கூட்டிக்கிட்டு போய் பாத்துக்கிட்டேன். ஆனா, இவருக்கு நம்ம சமையல், தயிர், பால் வகைகளா புரிய வெக்கிரத்துக்கு பட்ட பாடு ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா..........................:):):) கடசீல எங்க வீட்ல நானே சமிக்கிற நிலைமைன்னா பாத்துக்கங்க:):):)

rapp said...

இவ்ளோ செஞ்சிட்டோம், இதச் செய்யலைன்னா எப்டி? மீ த 30th:):):)

rapp said...

//ஆனா மெய்யாலுமே ஃபீல் பண்ணி எழுதுன வெடி தேங்காய்க்கு பின்னூட்டமே அவ்வளவே இல்லியே ஏன்? சும்மா தெரிஞ்சிகிறத் தான் கேக்கிறேன்//

அதுக்கு நீங்க உஷாரா என்னை மாதிரி, கருப்பனின் காதலி, பேரரசோட புதுப்பட டிவிடிக்கள் கதறக் கதற கொடுக்கப்ப்படும்னு அன்பா மிரட்டிருக்கணும்:):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சிக்கோ இனி நாநா பின்னூட்டம் ஏன் வரலைன்னு மட்டும் கேக்கவே மாட்டாருன்னு நினைக்கிறென்.. இந்நேரம் அவர் நிம்மதியா தூங்கிட்டிருப்பார்..
ஆனா அவர் கேட்டது வெடி தேங்காய்க்குத்தானே அங்க போய் பின்னூட்டம் போட்டமா நாம இல்லையே ?

நாநா said...

//Thooya said...

இப்போது சிரிப்பாக இருந்தாலும்..அந்த நேரத்தில் அழுகையாக வந்திருக்கும்..இல்லையா?
//

அத ஏன் கேக்குறீங்க? அழுவாத கொற தான்.

நாநா said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

வெடிதேங்காய் எப்ப வந்ததுன்னு தெரியலயே.. கொஞ்ச நாள் முன்ன தான் தமிழ்ப்ரியன் எழுதி அது பத்தி படிச்சேன்.. இப்ப தேடிப் பார்த்தேன் 3 பாகமா போட்டிருக்கீங்க.. நாங்க எல்லாம் தொடர் .. நீளமான கட்டுரை இதெல்லாம் படிக்கறதே பெரும்பாடு அதுல பின்னூட்டம் வேறயா..:)//

அடடே. இப்படி தெரிஞ்சிருந்தா இன்னும் சின்ன சின்ன பாகமா வாரத்துக்கு ஒண்ணா ரிலீஸ் பண்ணி இருப்பனே?

நாநா said...

// எனக்கு இவர் மாதிரி பிரச்சினை இல்ல. ஏன்னா, ஏதாவது ஒரு வார்த்தையாவது பிரெஞ்சுல தெரிஞ்சிருந்தாத்தான:):):) அதால மொதோ ரெண்டு தரம் இவர கூட்டிக்கிட்டு போய் பாத்துக்கிட்டேன். ஆனா, இவருக்கு நம்ம சமையல், தயிர், பால் வகைகளா புரிய வெக்கிரத்துக்கு பட்ட பாடு ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா..........................:):):) கடசீல எங்க வீட்ல நானே சமிக்கிற நிலைமைன்னா பாத்துக்கங்க:):):)//

நாஞ் சொன்னதெல்லாம் பதினோரு வருசத்துக்கும் முன்னாடி கதை. இப்ப இருக்க ஏரியால 2 மைலுக்கு ஒரு இந்தியன் ஸ்டோர்ஸ், 1 மைலுக்கொரு இந்தியன் ரெஸ்டாரண்டு. அதுவுமில்லாம இப்ப இந்தூரு நெளிவு சுழிவெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சி போச்சில்ல.

நீங்களா சமைக்கிற அளவுக்குன்னா நெலம படு மோசம் தான் போல.

நாநா said...

//rapp said...

அதுக்கு நீங்க உஷாரா என்னை மாதிரி, கருப்பனின் காதலி, பேரரசோட புதுப்பட டிவிடிக்கள் கதறக் கதற கொடுக்கப்ப்படும்னு அன்பா மிரட்டிருக்கணும்:):):)
//

நானு வலைப்பதிவாளர் உலகத்துக்கு புதுசு தானே. இந்த மாதிரி இன்சைடர் இன்பர்மேசன் எல்லாம் இனிமே தான் கத்துக்கணும்.

நாநா said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராப் ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சிக்கோ இனி நாநா பின்னூட்டம் ஏன் வரலைன்னு மட்டும் கேக்கவே மாட்டாருன்னு நினைக்கிறென்.. இந்நேரம் அவர் நிம்மதியா தூங்கிட்டிருப்பார்..
ஆனா அவர் கேட்டது வெடி தேங்காய்க்குத்தானே அங்க போய் பின்னூட்டம் போட்டமா நாம இல்லையே ?//

அட மக்கா... நீங்க மானஸ்திக தான். போட மாட்டோம்னா போட மாட்டோம்னு அடம் புடிக்கிறீகளே... வேணாம் நான் அழுதுடுவேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் எங்கம்மா போயிட்ட.. வந்த வேலை முடிஞ்சுடுச்சுப்பாரு..

Madhu Ramanujam said...
This comment has been removed by the author.
Madhu Ramanujam said...

அட! இங்க பார்ரா..... நம்ம போலவே நெறைய மக்கள் இருக்காய்ங்கப்பா...

கயல்விழி said...

ரொம்ப நல்லா இருக்கு :)

நான் முதல் முறையா Non-fat yogurt வாங்கிட்டு வந்து "ஏன் இப்படி சப்புனு இருக்கு?" என்று தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தேன் :)